அனைவருக்கும் வணக்கம் புதிய வலைப்பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
முதல் மதிப்பெண்: ***** -465 >>>>>முதல் மதிப்பெண்: *** - 430 >>>>>மூன்றாம் மதிப்பெண்: *** - 430 >>>>>>>>>>தமிழ் முதல் மதிப்பெண்: >>>>>ஆங்கிலம் முதல் மதிப்பெண்: >>>>>கணிதம் முதல் மதிப்பெண்: >>>>>அறிவியல் முதல் மதிப்பெண்: >>>>>சமூக அறிவியல் முதல் மதிப்பெண்:
MY DETAILS

Wednesday, 17 May 2023

தமிழ்நாடு அரசு: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு





தமிழ் நாடு அரசு : 01.01.2023 முதல் அறிவிக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு 01.04.2023 முதல் 3 மாதம் தள்ளி அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது - இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி  தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டு மே மாத பதவி ஏற்றது முதல் ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி அறிவிக்கிறதோ அப்போதெல்லாம் அறிவிக்காமல் ஆறு மாதம் தள்ளியே அறிவித்து வந்தது குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 01.06.2021 அறிவிக்க வேண்டிய அகவிலைப்படியை ஆறு மாதம் தள்ளி 01.01.2022 முதல் வழங்கினார்கள். 01.01.2022 அறிவிக்க வேண்டிய அகவிலைப்படையை 01.06.2022 முதலும் 01.06.2022 அறிவிக்க வேண்டிய அகவிலைப்படையை 01.01.2023 அன்றும் 01.01.2003 அறிவிக்க வேண்டிய அகவிலைப்படியே 01.04.2023 தள்ளி அறிவித்துள்ளது.

 இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கின்றதோ அதே நாளில் தமிழ்நாடு அரசும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் என்ற செய்தியை தமிழக முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
38% ஆக உள்ள அகவிலைப்படி தற்போது 42% ஆக அதிகரித்து உள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறுவார்கள்.






Tuesday, 16 May 2023

தொடக்கக் கல்வித் துறைக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!!!

தொடக்கக் கல்வித் துறைக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!!!

Sunday, 16 December 2018

2019 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH) - RH LIST 2019

2019 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH) - RH LIST 2019.....
1. 14-01-2019; திங்கள்- போகிப் பண்டிகை
2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம்
3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம்
4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி
5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன்
6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ்
7.18-04-2019; வியாழன்- பெரிய வியாழன்
8. 07-05-2019; செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்
9. 01-06-2019; சனி- ஷபே காதர்
10. 03-08-2019; சனி- ஆடிப்பெருக்கு
11. 09-08-2019; வெள்ளி- வரலெட்சுமி விரதம்.
12. 14-08-2019; புதன்- ரிக் உபகர்மா.
13. 16-08-2019; வெள்ளி- காயத்ரி ஜெபம்
14. 11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.
15. 28-09-2019; சனி- மஹாளய அமாவாசை
16. 02-11-2019; சனி- கல்லறைத் திருநாள்
17. 12-11-2019; செவ்வாய்- குருநானக் ஜெயந்தி
18. 10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்
19. 24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்
20. 31-12-2019; செவ்வாய்- நியூ இயர் ஈவ்

Friday, 17 November 2017

கீரப்பாளையம் ஒன்றியம், குறுவள மையம்: அறிவியல் கண்காட்சியில், வெய்யலூர், அரசு உயர்நிலைப்பள்ளி,இரண்டாம் இடம்

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம், ஒடாக்கநல்லூர் குறுவள மையத்தில்
17.11.2017 இன்று நடைபெற்ற 
அறிவியல் கண்காட்சியில், வெய்யலூர், அரசு உயர்நிலைப்பள்ளி 
#இரண்டாம்இடம்பெற்றது#
வெற்றி பெற்ற மாணவர்கள் பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் 
மு.அம்பேத்கார் அவர்கள் மற்றும் பள்ளியின் மூத்த ஆசிரியர்
ச.சங்கரன் அவர்களிடமும்   வாழ்த்து பெற்றனர்.
மேலும் 
இதற்காக உழைத்த அறிவியல் ஆசிரியர்கள் ரமேஷ், கனிமொழி 
உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.













Monday, 13 November 2017

அறிவியல் கண்காட்சி: வெய்யலூர், அரசு உயர்நிலைப்பள்ளி, கடலூர் மாவட்டம்.

கடலூர் மாவட்டம், வெய்யலூர், அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சி பொறுப்பு தலைமையாசிரியர் அம்பேத்கார் அவர்கள் பார்வையிட்ட போது  உடன் ஆசிரியர்கள் சங்கரன், ரமேஷ், மகேஷ்,மணிகண்டன்,கனிமொழி,செல்வி ஆகியோர்.