அனைவருக்கும் வணக்கம் புதிய வலைப்பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
முதல் மதிப்பெண்: ***** -465 >>>>>முதல் மதிப்பெண்: *** - 430 >>>>>மூன்றாம் மதிப்பெண்: *** - 430 >>>>>>>>>>தமிழ் முதல் மதிப்பெண்: >>>>>ஆங்கிலம் முதல் மதிப்பெண்: >>>>>கணிதம் முதல் மதிப்பெண்: >>>>>அறிவியல் முதல் மதிப்பெண்: >>>>>சமூக அறிவியல் முதல் மதிப்பெண்:
MY DETAILS

Wednesday, 19 October 2016

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் இன்று(19.10.2016) நடைபெற்றது.

                பொறுப்பு தலைமையாசிரியர் திரு.M.அம்பேத்கார் அவர்கள்.                                 பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு A.ராமதாஸ் அவர்கள்,
                    அறிவியல் ஆசிரியர் திரு.V.Tமலர்மன்னன் அவர்கள்
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் 


 19.10.2016 இன்று  பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காலாண்டுப்பொதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் பற்றி யும், மாணவர்களை எவ்வாறு அதிக மதிப்பெண்கள் பெறவைப்பது என்பதைப்பற்றியும், கலந்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Monday, 17 October 2016

NABARD திட்டத்தின் கீழ் ருபாய் 1.61 கோடியில் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம்





வெய்யலூர்,அரசு உயர்நிலைப்பள்ளியில்  NABARD திட்டத்தின் கீழ் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் ருபாய் 1.61 கோடியில் கட்டப்பட உள்ளது. துவக்க பணியாக பூமி பூஜை போடப்பட்டது. உடன்  பள்ளியின் PTA  தலைவர் A.ராமதாஸ் அவர்கள், தலைமையாசிரியர்(பொ)  மு.அம்பேத்கார் அவர்கள், அறிவியல் ஆசிரியர் V.T.மலர் மன்னன் அவர்கள். 

SAVE WATER SAVE LIFE” என்ற தலைப்பில் ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்

அரசு உயர்நிலைப்பள்ளி வெய்யலூர்
மத்திய நீர்வள அமைச்சகத்தின் சார்பில் “SAVE WATER SAVE LIFEஎன்ற தலைப்பில்  ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்

                உயர்நிலை (9-10)

முதல் இடம்          :  தி.சுபாஷ் - X
இரண்டாம் இடம் :  இ.அன்புராஜ்  - IX
மூன்றாம் இடம்    :  ஆ.அஜய் – IX
                      இடைநிலை(6-8)
முதல் இடம்         :  வீ.வசந்தகுமார் VII E/M
இரண்டாம் இடம்:  இ.தீபா – VII E/M
மூன்றாம் இடம்   :  ர.ஆகாஷ் - VIII

Saturday, 15 October 2016

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!
"என் பையன் நல்லா படிக்கிறான்படித்ததைக் கேட்டால் தவறில்லாமல் ஒப்பிக்கிறான்ஆனால் எக்ஸாமில் எழுதும்போது கையெழுத்து சரியில்லாததால் அதிக மதிப்பெண் எடுக்க முடியலை"னு புலம்பும் பெற்றோரா நீங்கள்?.உங்கள் பிள்ளையின் கையெழுத்தை சிறுசிறு பயிற்சிகள் மூலம் நீங்களே மாற்றியமைக்க எளிமையான டிப்ஸ் இதோ.

குழந்தை எழுதுவது அழகாக இல்லை என்றவுடன் இரட்டைக் கோடுநாலு கோடுகள் உள்ள நோட்டுகளை வாங்கி தந்துஅதிகநேரம் எழுத சொல்லி வற்புறுத்தாதீர்கள்,இதனால் அவர்களுக்கு எழுதுவதன் மீது வெறுப்புதான் உண்டாகும்.குழந்தையின் கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால்முதலில் fine Motor skill என்ற கைகளின்தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கை விரல்களுக்கு வேலைகள் கொடுக்கவேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடைந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

1. உங்கள் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் கிடைக்கும்சைனா களிமண்ணை வாங்கி தந்துபிசைந்து விளையாட வைப்பதும்சின்ன சின்ன உருவங்கள் செய்ய பழக்கப்படுத்தவும் செய்யுங்கள். இதனால் குழந்தையின் கைகள்தசைகள்கண்கள் என்று ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன்குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

2. உங்கள் வீட்டில் இருக்கும் மைதாசோளமாவுகோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை ஒரு பெரிய அகலமான தட்டில் வைத்து உங்கள் பிள்ளையை ஏதேனும் எழுதியோவரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

3. சில்லறை காசுகளை எண்ணிஅவற்றை சிறுதுளையுள்ள உண்டியலில் போடச்சொல்லலாம். மேலும்பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும். இதனால் பென்சிலை வழுக்காமல் அவர்களால் பிடித்து எழுத விரல்கள் பழக்கப்படும்.

4. குழந்தைகள் விளையாட வைத்து இருக்கும் இடுக்கியால்பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்.

5. பேப்பர்களைக் கிழித்து பந்துகள் போல் உருட்டி விளையாடினால் தடைபோடாமல் அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும்..

6. உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள்போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். கெட்டியான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில்நூலை கோர்க்கச் சொல்லி பழக்கப்படுத்தலாம்.

7. உங்கள் குழந்தைக்கு பிடித்த நிறத்தில் க்ரேயான்ஸ்அல்லது கலர் பென்சில்களைக் கொடுத்து முட்டைக்கூடுகாகிதக் கோப்பைகள் போன்றவற்றில் படம் வரைந்து வண்ணம்தீட்டச் சொல்லுங்கள்.

இப்படிச் செய்வதன்மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும்.இதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் குழந்தையின் கையெழுத்து சரியில்லை என்று மதிப்பெண்கள் குறையாது!!

PTA PRESIDENT

                                                                     PTA PRESIDENT
                                                               Thiru. A.RAMADOSS Avl